திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள்.. வியந்துபோன ரஜினி..!

திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள்.. வியந்துபோன ரஜினி..!

திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள்.. வியந்துபோன ரஜினி..!
Published on

மாற்றுத் திறனாளிகளின் கலைத்திறமையை கண்டு ரஜினிகாந்த் நெகிழ்ச்சியடைந்தார். அதோடு அவர்களை பாராட்டவும் செய்தார்.

குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள‌ ‘குழந்தைகளுக்‌கான அமைதி’ என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், குழந்தைகளின் பாதுகாப்புக்காக மேற்கத்திய நாடுகள் செலவு செய்வதில் ஒரு சதவிகிதம் கூட மத்திய, மாநில அரசுகள் செலவு செய்வதில்லை என வேதனை தெரிவித்தார்.

இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் தொடக்கதிலேயே வந்து அமர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்கள் தன்னம்பிக்கையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன. அதிலும் ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என்ற பாடலும், அதற்கு குழந்தைகள் நடனமாடிய விதமும் பார்வையாளர்களைக் வெகுவாகவே கவர்ந்தது.

குழந்தைகள் ஒரு புறம் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் நடன பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், எங்களாலும் எல்லாம் முடியும் என்பதை தன்னம்பிக்கையோடு செய்து காட்டினர். இரண்டு கைகளும் இல்லாத ஒரு கலைஞர் ட்ரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை வாசித்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. இவரைத்தொடர்ந்து கால்கள் இல்லாத கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். இவர்கள் நடனமாடியதை அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.

இவர்களின் நடனத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் நெகிழ்ச்சியடைந்தார். அதோடு எழுந்து நின்று அவர்களது திறமையை பாராட்டிய ரஜினிகாந்த், மேடைக்குச் சென்று அவர்களோடு கை குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரஜினிகாந்தின் இந்த செயலைக் கண்டு அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com