போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து

போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து

போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து
Published on

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் இன்று கொண்டாடி வருகின்றனர். தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையில் எழுந்து வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் சூரியனை வணங்கி, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். காலை நேரத்திலேயே பலர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போய‌‌ஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அப்போது வீட்டுமுன் காத்திருந்த ரசிகர்களை நேரில் வந்து சந்தித்து தமது பொங்கல் வாழ்த்துகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினிக்கும் தங்களின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com