ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்தது - ரஜினிகாந்த் இரங்கல்

ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்தது - ரஜினிகாந்த் இரங்கல்

ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்தது - ரஜினிகாந்த் இரங்கல்
Published on

காஞ்சி காமக்கோடி பீடத்தின் மடாதிபதி ஜெயந்திரேர் சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத் திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இவருக்கு பிரதமர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் " பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில்,
அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com