மெரினா இடஒதுக்கீடு : மயில்சாமி, கோகுல இந்திரா காரசார விவாதம்

மெரினா இடஒதுக்கீடு : மயில்சாமி, கோகுல இந்திரா காரசார விவாதம்
மெரினா இடஒதுக்கீடு : மயில்சாமி, கோகுல இந்திரா காரசார விவாதம்

புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா காரசார விவதாம் செய்தனர்.

இதில் பேசிய மயில்சாமி, “திமுக தலைவர் மாலையில் இறந்தபோது கடைகள் உடைக்கப்படவில்லை. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஏனென்றால் அரசியல் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவருமே, அவருக்கு மெரினாவில் இடம்கொடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். 7 மணிக்கு மேல் மெரினாவில் இடம் கொடுக்க இயலாது என்று அறிவித்த பிறகுதான், காவேரி மருத்துவமனையில் பேரிகேட் பறந்தது. அதற்குள் திமுக வழக்கிற்கு சென்றதால் அனைவரும் கட்டுக்கோப்பாக இருந்துவிட்டனர். இருந்தாலும் கருணாநிதிக்கு இருந்த பெயருக்காக அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இருந்தாலும் நீதிமன்றம் இடம் கொடுத்ததைவிட, அரசு நீங்கள் இடம்கொடுத்திருந்தால் பெருந்தன்மை என்ற பெயரை வாங்கியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

அவருக்கு பதிலளித்து பேசிய அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அரசு நிதிஒதுக்கீடு செய்து, மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதை எதிர்த்து 5 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வழக்குகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு எனக் கூறப்பட்டு, மணிமண்டபம் கட்டுவதை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கருணாநிதி இறந்த அன்று மட்டும் அவர்கள் உடனே வழக்குகளை வாபஸ் பெற்றனர். அப்போது அது பொதுநல வழக்கா? இல்லை அரசியல் நோக்க வழக்கா? எங்கள் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தை சட்டசபையில் வைக்கக்கூடாது என வழக்குத் தொடர்ந்தவர்கள் தானே திமுவினர். அப்போது அவர்களுக்கு எப்படி நாங்கள் மனம் உகந்து அனுமதிகொடுப்போம். அதிமுகவினருக்கு உணர்வுகள் இல்லையா?” என்று கேட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com