\
மாதவன்
மாதவன்web

வினாத்தாள் கசிவு| ”மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறது..” - நடிகர் மாதவன்

வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கின்றன என்றும், இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கனவுகளையும் பாதிப்பதாக நடிகர் மாதவன் கவலை தெரிவித்துள்ளார்.
Published on
Summary

நாட்டில் தொடரும் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் குறித்து நடிகர் ஆர். மாதவன் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். கல்வி தான் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி என்றும், ஒவ்வொரு மாணவருக்கும் நேர்மையான, வெளிப்படையான, தகுதியை மதிக்கும் கல்விமுறை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் உழைப்பு, நம்பிக்கை, கனவுகளை கசிவு சம்பவங்கள் சீர்குலைக்கின்றன என வேதனை தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பிரபல திரைப்பட நடிகர் ஆர். மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி கல்விக்கு உண்டு. ஒவ்வொரு மாணவருக்கும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் தகுதியின் அடிப்படையில் செயல்படும் கல்விமுறை கிடைக்க வேண்டும். இந்தியாவின் இளைஞர்களிடம் உள்ள எல்லையற்ற ஆற்றலை எப்போதும் நம்பும் ஒருவனாக, இன்று பலமாணவர்களும் பெற்றோர்களும் உணரும் கவலையையும் ஏமாற்றத்தையும் நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

காவல்துறை தடியடி
காவல்துறை தடியடிPt web

ஒரு கல்விமுறை என்பது நம்பிக்கை, நேர்மை மற்றும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். தேர்வுத் தாள் கசிவு போன்ற சம்பவங்கள் அந்த நம்பிக்கையைச் சீர்குலைப்பதுடன், எண்ணற்ற இளைஞர்கள் மற்றும்அவர்களின் குடும்பங்களின் உழைப்பு, நம்பிக்கை மற்றும் கனவுகளைக் கடுமையாகப் பாதிக்கின்றன. குறிப்பாகக் கல்வி வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் இது மிகவும் முக்கியமானது.

தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் உழைப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் வரிசையாகக் குரல் கொடுத்து வரும் சூழலில், நடிகர் மாதவனின்இந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com