\
நடிகர் லிவிங்ஸ்டன்
நடிகர் லிவிங்ஸ்டன்புதிய தலைமுறை

RIP Vijayakanth | "எந்தப் பக்கம் பார்த்தாலும் அழுகுரல்.." - லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி பேச்சு

"விஜயகாந்த்-ஐ பார்க்க ஓடிவரும் மக்களை பார்க்கும் போதுதான் அவர் மக்கள் மீது வைத்திருந்த அன்பும், மக்கள் அவர் மீது வைத்திருந்த அன்பும் தெரிகிறது" - நடிகர் லிவிங்ஸ்டன்
Published on: 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் லிவிங்ஸ்டன், செய்தியாளர்களிடையே பேசுகையில் “விஜயகாந்த் அவர்கள் மக்களிடம் எப்பேர்பட்ட அன்பை சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதற்கு சென்னையில் கூடியுள்ள கூட்டமே சாட்சி. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கு. ஓடுறாங்க ஒடியார்றாங்க மக்கள்.

ஒரு மனிதரிடம் பதவி, அந்தஸ்து, அதிகாரம் இதெல்லாம் இருக்கும்போது மக்கள் கூடுவாங்க. ஆனா அது அன்புக்காகவும் அவருக்காகவும் கூடும் கூட்டம் அல்ல. அதுவே, அந்த மனிதர் இறந்தபிறகு கூடும் கூட்டம்தான் அவருடைய உண்மையாக சம்பாத்தியம். இங்கு விஜயகாந்த் அவர்களை பார்க்க ஓடிவரும் மக்களை பார்க்கும் போதுதான் அவர் மக்கள் மீது வைத்திருந்த அன்பும், மக்கள் அவர் மீது வைத்திருந்த அன்பும் தெரிகிறது" என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

நடிகர் லிவிங்ஸ்டன்
“இங்கு விடப்படுகிற ஒவ்வொரு கண்ணீரும் உள்மனதில் இருந்து வருவது” - குஷ்பூ கண்ணீர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com