\
அனிதா குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கினார் நடிகர் லாரன்ஸ்!

அனிதா குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கினார் நடிகர் லாரன்ஸ்!

அனிதா குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கினார் நடிகர் லாரன்ஸ்!
Published on

நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் வழங்கி உதவியுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அனிதாவிற்கு திரையுலகின இரங்கல் தெரிவித்தனர். சிலர் அவரது இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டனர். 
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அனிதா குடும்பத்துக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகைக்கான காசோலையை லாரன்ஸின் உதவியாளர்கள் அரியலூர் அருகே உள்ள குழுமூருக்கு சென்று அனிதா குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் லாரன்ஸும் போராட்டத்தில் பங்கேற்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com