\
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் அவர். தனது பதிவில் அவர், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com