பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ''உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com