\
அரசியல் எல்லைகள் கடந்து புகழ்பெற்றவர் சிவாஜி: கமல்ஹாசன்

அரசியல் எல்லைகள் கடந்து புகழ்பெற்றவர் சிவாஜி: கமல்ஹாசன்

அரசியல் எல்லைகள் கடந்து புகழ்பெற்றவர் சிவாஜி: கமல்ஹாசன்
Published on

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவிற்கு வருவதை யார் தடுத்திருந்தாலும், ஒரு ரசிகனாக எப்படியும் வந்திருப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை அடையாறில் நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசும்போது, ‘நான் சினிமாவிற்கு வரவில்லை என்றாலும் சிவாஜி ரசிகனாக இருந்திருப்பேன். இந்த மண்டபத்திற்குள் என்னை அனுமதிக்கவில்லை என்றாலும், ரசிகர்களில் ஒருவனாகக் கூட்டத்திற்கு வெளியே நின்றிருப்பேன். யார் தடுத்தாலும், எப்படியும் இந்த விழாவிற்கு வந்திருப்பேன். சிவாஜி மாநில, தேசிய, ஆசிய, அரசியல் எல்லைகளை கடந்து உலகப் புகழ் பெற்றவர். சிவாஜி குடும்பத்தில் நானும் ஒருவன். அவரது நடிப்பைப் பின்தொடர முயன்று தோற்றவர்களிலும் நானும் ஒருவன். இதற்கு முன் இருந்த அரசு அல்ல, தற்போது உள்ள அரசு அல்ல, இனி எந்த அரசு வந்தாலும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தும்’ என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com