பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக என்னை எதிர்ப்பவர்களும் எனது ரசிகர்கள்தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அவர்கள் தன்னை சிறையில் போட்டுப்பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களும் என் ரசிகர்கள்தான் என்றார். அதே சமயத்தில் தன்னை கைது செய்யச் சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும். சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்த் தாய் வாழ்த்தை கிண்டல் செய்யவில்லை என்று கூறிய அவர் அதைக் கற்றுக் கொடுப்பது எப்படி அதை இழிவு படுத்துவதாகும் என்று கேள்வி எழுப்பினார். கிரிக்கெட் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியம். என்னை நம்பும் மக்களுக்கு விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன். முத்தக்காட்சியில் சீரழியாத சமூகம் பிக்பாஸில் சீரழிந்து விடுமா? அடுத்த வீட்டில் நடப்பதைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள முடியும் என்றும் கமல் கூறினார்.
மத்திய மாநில அரசுகளுக்கு மார்க் போட மாட்டேன் என்றும், ஓட்டு மட்டுமே போடுவேன் என்று கூறிய கமல், சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது தவறு இல்லை என்றார். சைவம் என்ற சொல் இங்கு மதத்தோடு சேர்த்துப் பார்க்கப்படுகிறது. அசைவ உணவை விட சைவ உணவு சிறந்தது என்று மருத்துவரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கமல் கூறினார்.