குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய வழக்கு: நீதிமன்றத்தில் ஜெய் சரண்
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்ற போது, அடையார் அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. கார் மோதியதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. மேலும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.