actor Ilavarasu
actor Ilavarasupt desk

RIP Vijayakanth: விஜயகாந்த் குறித்து கண்கலங்கி பேசிய நடிகர் இளவரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் இளவரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Published on

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து நடிகர் இளவரசு வேதனை தெரிவித்துள்ளார். அவர் நம்மோடு பேசுகையில், “விஜயகாந்த் அவர்கள் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் ஏனோதானோ என்றோ பட்டும் பாடாமலோ இருக்க மாட்டார். எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபாட்டோடு செய்வார். தன்னை நம்பி வருபவர்களுக்கு நம்பிக்கை தருவார்.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால் பின் விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார். அவமானங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதை எதிர்த்துப் போராடி வளர முடியும் என்றால் அதற்கு உதாரணம் விஜயகாந்த்தான்” என்றார் நடிகர் இளவரசு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com