‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ - நடிகர் சரத்குமார் மீது தனுஷின் தாயார் வழக்கு! நீதிமன்றம் சொன்னதென்ன?

அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் - விஜயலட்சுமி - சரத்குமார்
தனுஷ் - விஜயலட்சுமி - சரத்குமார்முகநூல்

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா மற்றும் நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்தனர். அதில், “உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல்தளத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் சிலர் தடுக்கின்றனர்.

மேலும் தரைத்தளத்தில் உள்ள பொது பகுதியை சட்டவிரோதமாக நடிகர் சரத்குமார் ஆக்கிரமித்து வணிக ரீதியாகப் பயன்படுத்துகிறார். இதுகுறித்து சென்னை மாநகராட்சியில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

தனுஷ் - விஜயலட்சுமி - சரத்குமார்
கரடுமுரடான அரசியல் களம்... 25 ஆண்டுகால கனவான அரசியல் அங்கீகாரம்... விசிக சாதித்த வரலாறு!

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மற்றும் செந்தில்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com