Actor Dhamupt desk
தமிழ்நாடு
RIP Vijayakanth | நடிகர் தாமு பேச்சால் கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்
“எல்லோருடைய ஆரோக்கியத்துக்காகவும் வாரி வாரி கொடுத்தவர் அவரோட ஆரோக்கியத்தை விட்டுவிட்டார்” - நடிகர் தாமு
நடிகர் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் தாமு, பின் செய்தியாளர்களிடையே பேசுகையில், “பெரிய நடிகர்கள் முதல் சமீபத்தில் வந்த நடிகர்கள் வரை எல்லோருக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தை கொடுக்கின்ற உன்னதமான மனிதர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் பெருமைக்குரிய தலைவராக இருந்தார்.
எல்லோருடைய ஆரோக்கியத்துக்காகவும் வாரி வாரி கொடுத்தவர் அவரோட ஆரோக்கியத்தை விட்டுவிட்டார். அவருடை ஆன்மா பூரண சாந்தி அடையட்டும்” என்று கூறி அவருடனான தன் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.