\
ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல: சென்னை காவல் ஆணையர்

ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல: சென்னை காவல் ஆணையர்

ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல: சென்னை காவல் ஆணையர்
Published on

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் 80 ஆயிரம் யூரோ மோசடி செய்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மனியில் குடியேறிய இலங்கை பெண்ணை நடிகர் ஆர்யா ஏமாற்றவில்லை என்றும் சென்னை போலீஸ் ஆணையர் தெரிவித்தார். இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி ஆர்யா ஏமாற்றியதாக தகவல் வெளியான நிலையில் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “இந்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில்  நடிகர் ஆர்யாவின் செல்போனில் இருந்து பேசப்படவில்லை. மொபைல் எண்ணை வைத்து இடத்தை கண்டுபிடித்தபோது பெண் குரலில் பேசியது தெரியவந்துள்ளது. குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக ஆர்யா காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் ” எனத் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com