லீசுக்கு இருந்த வீட்டை பூட்டி வெல்டிங்..? சிக்கலில் நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத்!

லீசுக்கு வீட்டை கொடுத்து விட்டு திடீரென வீட்டை பூட்டி வெல்டிங் வைத்ததாக நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகேந்திர பிரசாத்
நாகேந்திர பிரசாத்File image

சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகரும் நடன இயக்குனருமான நாகேந்திர பிரசாத்-க்கு சொந்தமான வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் லீசுக்கு குடியேறியதாக தெரிவித்துள்ளார்.

vignesh
vigneshpt desk

அப்போது அந்த வீட்டை கேர் டேக்கராக வைத்திருந்த  S.D.S.K என்ற நிறுவனத்திடம் 25 லட்சம் ரூபாய் லீசுக்கான பணத்தை கொடுத்ததாகவும், ஆனால், கடந்த ஓராண்டாக வீட்டை காலி செய்ய நாகேந்திர பிரசாத் வற்புறுத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாகேந்திர பிரசாத்
AI Deep Fake Videos குறித்து பரவும் அச்சம்... செயற்கை நுண்ணறிவு நிபுணர் சொல்வதென்ன?

இச்சூழலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை வெல்டிங் வைத்து நாகேந்திர பிரசாத் தரப்பினர் அடைத்தாகவும், வீட்டிற்குள் தங்களது நாய் சிக்கியதாகவும் விக்னேஷ் புகார் அளித்துள்ளார்.

police investigation
police investigationpt desk

இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த நாயை பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ், வீட்டை காலி செய்யச் சொல்லி தன்னை நாகேந்திர பிரசாத் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com