\
கோட்
கோட்முகநூல்

”’The G.O.A.T’ திரைப்படத்தை வாழ்த்தி பேசினார் அஜித்” - இயக்குநர் வெங்கட்பிரபு சொன்ன சுவீட் தகவல்

தி கோட் திரைப்படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டதாகவும், படத்தில் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் நடிகர் அஜித் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
Published on: 

நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம், கடந்த 5ஆம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தி கோட் திரைப்படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டதாகவும், படத்தில் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் நடிகர் அஜித் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், படத்தின் டைரக்டர் கட்-இன் நேர அளவு 3 மணி நேரம் 40 நிமிடங்கள் என்றும், இதை கண்டிப்பாக ஓடிடியில் வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com