தமிழ்நாடு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் திரை பிரபலங்கள்..!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் திரை பிரபலங்கள்..!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
சமூக வலைதளத்தில், ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என நடிகர் ஆர்யா போட்ட பதிவால், அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை ஆர்யா பதிவு செய்துள்ளார்.