தமிழ்நாடு
அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்
அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்
தமிழகத்தில் பொது விநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
பொதுவிநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கடந்த 3 மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த 3 மாதங்களாகப் பொது விநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவை விநியோகிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து பொதுவிநியோகக் கடைகளிலும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.