ஒரு வாரத்தில் திருமணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி கைது

ஒரு வாரத்தில் திருமணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி கைது
ஒரு வாரத்தில் திருமணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி கைது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, ஐபிசி 328ன் படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நந்தினி, நீதிபதியிடம் வாதாடினார். இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் நந்தினிக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், அவரும், அவரது தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com