\
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை!

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை!

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை!
Published on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக உள்துறை செயலாளருக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சிவி சண்முகம், உள்துறை செயலாளர் அக்கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com