\
நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை

நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை

நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை
Published on

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி நிர்வாக கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இதுதொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், நீதி நிர்வாக கொள்கை விளக்கக்குறிப்பில் நீதிமன்ற கட்டடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 990 நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 109 நீதிமன்றங்கள் அரசுக் கட்டடங்களிலும் செயல்படுவதாகவும், 87 நீதிமன்றங்கள் தனியார் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டவும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com