“பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் விசாரணை தேவை”- சசிகலா ஆதரவாளர் மனு

“பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் விசாரணை தேவை”- சசிகலா ஆதரவாளர் மனு

“பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் விசாரணை தேவை”- சசிகலா ஆதரவாளர் மனு
Published on

சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காத பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று, சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர், பெங்களூரு காவல்துறை ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி ராஜராஜன் என்ற வழக்கறிஞர், பரப்பன அக்ரஹாரா காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில், சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் திட்டமிட்டு உரிய சிகிச்சையை மறுத்து வந்ததாகவும், அவர், விடுதலையாவதை தாமதப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதாகவும், அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த மனு தொடர்பாக பரப்பன அக்ரஹார காவல் நிலையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட்டுக்கு இ மெயில் மூலம் ராஜராஜன் மேலும் ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். உடனடியாக காவல் துறை ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சசிகலா ஆதரவாளர் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com