தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளை தேடும் அதிரடிப்படை
தமிழக - கேரள எல்லையில் உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் முகாம் அமைத்து பயிற்சி பெற்ற 45 மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும், அவர்களில் சிலர் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியில் நடமாடுவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
வனப்பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் தொடங்கியுள்ளது. வனப்பகுதிக்குள் அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை தொடர்ந்து தேடி வருகின்றனர். மலைகிராமங்களில் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளன.