தடைசெய்யப்பட்ட குட்கா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு

தடைசெய்யப்பட்ட குட்கா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு
தடைசெய்யப்பட்ட குட்கா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் குட்கா விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“போதை ஏற்படுத்தும் குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், வாகன சோதனை செய்யப்பட்டதில் 8 இரு சக்கர வாகனங்கள், 7 கார்கள், 5 வேன்கள் மற்றும் 3 லாரிகளில் குட்கா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் வணிக வளாகங்கள், கடைகள், குடோன்கள் போன்ற இடங்களில் சோதனை செய்யப்பட்டு வடக்கு மண்டலத்தில் 1,367 வழக்குகள் பதிவு செய்து 1,397 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மண்டலத்தில் 257 வழக்குகள் பதிவு செய்து 260 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு மண்டலத்தில் 1,154 வழக்குகளில் 1,119 பேரும், தெற்கு மண்டலத்தில் 691 வழக்குகளில் 693 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகரத்தில் 5 வழக்குகளில் 10 பேரும், கோயம்புத்தூர் மாநகரத்தில் 41 வழக்குகளில் 42 பேர், திருப்பூர் மாநகரத்தில் 71 வழக்குகளில் 73 பேர், திருச்சி மாநகரத்தில் 70 வழக்குகளில் 70  பேர், சென்னை நகரத்தில் 343 வழக்குகளில் 357  பேர், மதுரை மாநகரத்தில் 28 வழக்குகளில் 28  பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக“ தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 4027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4049 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 29.07.2021 மற்றும் 30.07.2021 அன்று சேலம் மாநகரத்தில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்து சரக்கு வாகனங்களில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இரு இடங்களில் நடத்திய சோதனைகளில் 3 லாரிகள் மற்றும் ஒரு பொலிரோ காரில் வைத்திருந்த 1.5 கோடி மதிப்புள்ள 9.78 டன் குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் 6.04 கோடி மதிப்புடைய சுமார் 30,399 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குட்கா கடத்தப்படும் வழிமுறைகள் மற்றும் குட்கா வியாபரிகளின் விற்பனை வலையத்தை கண்டுபிடித்து அதன் முக்கிய புள்ளிகளை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைத்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com