திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியம்: பணிக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை!

திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியம்: பணிக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை!
திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியம்: பணிக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை!

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடிர் ஆய்வு மேற்கொண்ட போது, பணிக்கு வராமல் இருந்த நான்கு மருத்துவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் மொத்தம் 16 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் 4 மருத்துவர்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபாவடிவுக்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷாபாலாஜி, தொண்டை காது மூக்கு காது சிறப்பு மருத்துவர் கிருத்திகா உள்ளிட்ட நான்கு மருத்துவர்கள் மீது துறை ரீதியாக 17 b ஆணைப்படி ஊக்கத்தொகை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் முறையாக ஆய்வு செய்யாத மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை பணியிடை மாற்றம் செய்ய மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com