சுகாதாரத்துறை மீது கிரண்பேடி குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை மீது கிரண்பேடி குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை மீது கிரண்பேடி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரியில் சுகாதாரத்துறை செயல்படவில்லை என்று அம்மாநிலத்தின் ஆளுநர் கிரண் பேடி புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சுகாதாரத்துரையின் செயலற்ற போக்கே காரணம் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி குற்றசாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் புதுச்சேரியில் துப்புரவு பணிகள் ஒழுங்காக மேற்கொள்ளாததே டெங்கு வேகமாக பரவுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தனிச்செயலாளரின் மகன்கள் கூட டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com