சென்னை விமான நிலையத்தின் 6ஆவது நுழைவாயில் அருகே திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6ஆவது வாயிலுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருந்த மரக்கட்டைகள் மற்றும் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. அதைக்கண்ட ஊழியர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டது. 6ஆவது வாயில் என்பது முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாயிலாகும்.
விமான மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்த திமுக தலைவர் ஸ்டாலின் தீவிபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர் 6ஆவது வாயில் வழியாக வெளியே வந்தார். இதே போல் தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள 5ஆவது வாயில் வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதும் குறிப்பிடத்தக்கது.