தமிழ்நாடு
போதையில் விபத்துக்கு பின்பும் மது குடித்த ஓட்டுநர்: பொதுமக்கள் அதிர்ச்சி
போதையில் விபத்துக்கு பின்பும் மது குடித்த ஓட்டுநர்: பொதுமக்கள் அதிர்ச்சி
மது அருந்திவிட்டு ஓட்டுநர் லாரியை இயக்கியதால் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் சிமென்ட் மூட்டை லாரி, லோடுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்திற்கு பின்னரும் லாரியின் முன்னால் அமர்ந்து ஓட்டுநர் மது அருந்தியது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்த ஓட்டுநர் குடி போதையில் லாரி ஓட்டியதாகவும் அதனால் தான் விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்தால், பாலத்திற்கு கீழ் இருந்த குடிநீர் குழாய் இணைப்பு உடைந்ததுடன் சிமென்ட் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்தன. ஆனால் விபத்திற்கு பின்னரும் லாரியின் முன்னால் அமர்ந்து ஓட்டுநர் மது அருந்தியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.