கோயம்பேடு: மெட்ரோ ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் 4 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி

கோயம்பேடு அருகே மெட்ரோ ரயிலினுள் ரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கி விழுந்ததில் பயணம் செய்த நான்கு பயணிகளுக்கு காயம் அடைந்துள்ளனர்.
மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்கோப்பு படம்

கோயம்பேடு அருகே மெட்ரோ ரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கி விழுந்ததில் பயணம் செய்த நான்கு பயணிகளுக்கு காயம் அடைந்துள்ளனர்.

வடபழனியிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலில் பயணித்த பவித்ரா, சதீஷ்,லோகேஷ், ராஜேஷ்குமார் ஆகிய நான்கு நபர்களின் தலையில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கி விழுந்துள்ளது. இந்நிலையில், நான்கு நபர்களையும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

மெட்ரோ ரயில்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்கள் ; பல கி.மீ நடந்து சென்று அழைத்து வந்த பெண் காவலர்கள்!

இதனையடுத்து விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோயம்பேடு பேருந்து நிலைய வளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரும்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கி விழுந்து உள்ளே பயணம் செய்த நான்கு நபர்களின் தலையில் விழுந்ததுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com