அரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்

அரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்
அரசுபேருந்து மோதி  பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்

சென்னையை அடுத்த மறைமலை நகரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மகிந்திரா சிட்டி அருகேயுள்ள அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஊருக்கு அருகே சாலையில் வலதுபுறம் திரும்பியபோது, மரக்காணத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லாவண்யா மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயி்ரிழந்தார். அவரது கணவர் புருஷோத்தமன் காயங்களின்றி தப்பினார். தகவலறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழப்புக்குக் காரணமான பேருந்து மீது கல்வீசித் தாக்கினர்.

அங்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மறியலில் ஈடுபட்டவர்ககளை கலைந்து போகுமாறு கூறினார். அப்போது பொதுமக்கள் கல்வீசித் தாக்கியதில், காவல் கண்காணிப்பாளர் ஹதிமானி உள்ளிட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி - சென்னை தேதிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கல்வீச்சு தொடர்பாக மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com