தமிழ்நாடு
விபத்தை தவிர்க்க முயன்றபோது விபத்து: தீயில் கருகிய கார், பைக்!
விபத்தை தவிர்க்க முயன்றபோது விபத்து: தீயில் கருகிய கார், பைக்!
கடலூர் சாலைகரை அருகே காரும் இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்தன.
முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க திருப்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி மீதும் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. விபத்தில் இருசக்கரவாகனமும் காரும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காரில் வந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் காரும் இருசக்கர வாகனமும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதனால் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.