கொரோனா முடக்கத்துக்குப்பின் தமிழகத்தில் வழக்கத்துக்கு வருகிறது அரசு ஏ.சி. பேருந்து சேவை

கொரோனா முடக்கத்துக்குப்பின் தமிழகத்தில் வழக்கத்துக்கு வருகிறது அரசு ஏ.சி. பேருந்து சேவை
கொரோனா முடக்கத்துக்குப்பின் தமிழகத்தில் வழக்கத்துக்கு வருகிறது அரசு ஏ.சி. பேருந்து சேவை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏ.சி. பேருந்து இயக்கப்படாமல் இருந்த நிலையில், அரசு ஏ.சி. பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.

அந்த நெறிமுறைகளின்படி, “பேருந்துகள் இயக்குவதற்கு முன்பு அதை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும். பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம். நடத்துனர், பயணிகளுக்கு கிருமிநாசினி கொடுக்க வேண்டும்” என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நெறிமுறைகளின்படி நாளை முதல் மொத்தமாக 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சென்னையில் மட்டும் 48 ஏ.சி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் படுக்கை வசதிகளுடன் கூடிய 340 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 92 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலம் மற்றும் கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் சார்பில் தலா 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் கழகம் சார்பில் 52 பேருந்துகள், மதுரை போக்குவரத்து கழகம் சார்பில் 40 பேருந்துகள் இயக்கவும், திருநெல்வேலி மண்டலம் சார்பாக 30 பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com