பூம்புகார்: அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த காகங்கள்... நடந்தது என்ன?

பூம்புகார்: அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த காகங்கள்... நடந்தது என்ன?
பூம்புகார்: அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த காகங்கள்... நடந்தது என்ன?

சீர்காழி அருகே பூம்புகாரில் குடியிருப்பு பகுதியில் காகங்கள் மற்றும் நாய்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை வாய்பை இழந்து வீடுகளிலேயே உள்ளனர்.

இந்நிலையில் பூம்புகார் மீனவர் காலனி குடியிருப்பு பகுதியில் காகங்கள் கூட்டமாய் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. கொரோனா வைரஸ் அச்சத்தால் வீடுகளில் முடங்கியிருந்த மீனவர் வீட்டை சுற்றி காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்சியடைந்தனர்.

அதே பகுதியில் அடுத்தடுத்து மூன்று நாய்களும் இறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இறந்த காக்கைகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்தியதுடன் மஞ்சள்நீர் வேப்பிலை கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அவை மர்மமான முறையில் இறந்தது குறித்து உரிய நடவடிக்கை கோரி பூம்புகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஏதேனும் நோய் தொற்றால் இவைகள் இறந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட காக்கைககளும் 3 நாய்களும் இறந்த சம்பவம் பூம்புகார் மீனவர் கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com