மது விநியோகம்File Image
தமிழ்நாடு
தொடர் விமர்சனங்கள் எதிரொலி: திருமண மண்டபங்களில் மது விநியோகம் சட்ட திருத்தம் நீக்கம்
வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் விருந்துகளில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் அரசிதழில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது.