சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் நியமனம்
சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் நியமனம்web

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் நியமனம்!

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி வெங்கடராமன் உடல் நிலை காரணமாக விடுமுறை எடுத்துள்ளதால், அவருக்கு பதிலாக அபய்குமார் சிங்கிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் டிஜிபியாக உள்ளார்.

தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு டிஜிபி-யாக இருந்த வெங்கடராமன், உடல் நிலை சரியில்லாமல் வருகிற 25 ஆம் தேதி வரை விடுமுறை எடுத்துள்ளதால் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்கிற்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அபய்குமார் சிங் தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்துறை டிஜிபியாக உள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியை கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அபய்குமார் சிங்
அபய்குமார் சிங்

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், இருதய பிரச்சினை காரணமாக நேற்று ஆஞ்சியோ சிகிச்சை ஆலோசனை மேற்கொள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள விடுப்பானது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com