தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் கைவிடப்பட்ட குழந்தை: தாய் தலைமறைவு

தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் கைவிடப்பட்ட குழந்தை: தாய் தலைமறைவு
தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் கைவிடப்பட்ட குழந்தை: தாய் தலைமறைவு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பிறந்தவுடன் கைவிடப்பட்ட பச்சிளம் கு‌ழந்தை மீட்கப்பட்டுள்ளது.

கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடி சலங்கைபாளையம் பட்டத்தரசியம்மன்கோயில் வீதியில் அதிகாலை திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டதைக் கண்டு பொதுமக்‌கள் அங்கு சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது அங்கு பிறந்து சிறிது நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் இரத்தக்கறைகளுடன் அழுதுகொண்டு கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்தக் குழந்தைக்கு தொப்புள்கொடியை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், தலை‌மறைவாகியுள்ள தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com