கடைசி காலத்தில் கைவிட்ட மகன்: 80 வயது மூதாட்டியின் கண்ணீர் கதை

கடைசி காலத்தில் கைவிட்ட மகன்: 80 வயது மூதாட்டியின் கண்ணீர் கதை
கடைசி காலத்தில் கைவிட்ட மகன்: 80 வயது மூதாட்டியின் கண்ணீர் கதை

வயது முதிர்ந்த காலத்தில் ஆதரவு அளிக்க மறுப்பதாக, பெற்ற மகன் மீது 80 வயது மூதாட்டி கண்ணீரோடு வந்து புகார் அளித்துள்ளார். அந்த முதிய தாயின் வேதனையை பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு

பெற்ற மகன் தனக்கு உதவி செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார் கோமலா பாய் என்ற மூதாட்டி. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டத்தின் கீழ் இந்த புகார் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

மூதாட்டி கோமலா பாய், கடந்த 5 ஆண்டுகளாக காப்பகம் ஒன்றில் வேலைபார்த்து அங்கேயே தங்கியிருக்கிறார்.கடற்படையில் பணியாற்றிய கணவர், பின்னர் தனியார் நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், அவரின் மறைவுக்குப்பின் அவரின் வேலை, மகனான கமலக்கண்ணனுக்கு கிடைத்துள்ளது. மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்துவிட்ட நிலையில், மகன் தன்னை காப்பாற்றுவான் என நம்பி நகைகளை விற்று அவருக்கு வீட்டுமனை வாங்கித் தந்துள்ளார் கோமலா பாய். ஆனால், மகன் கைவிட்டநிலையில், கண்ணீருடன் வந்து காவல்துறையில் இவர் புகார் அளித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com