நெல்லை: முகாமில் திறந்தவெளி திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்'

நெல்லை: முகாமில் திறந்தவெளி திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்'

நெல்லை: முகாமில் திறந்தவெளி திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்'
Published on

நெல்லையில் ஊரடங்கின்போது மீட்கப்பட்ட ஆதரவற்றோர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் திறந்தவெளி திரையரங்கம் ஏற்பாடு செய்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரிந்தவர்களே.

இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவை அடுத்து நெல்லையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவின்றியும், மனநலம் பாதிக்கப்‌பட்டும் சாலைகளில் சுற்றித் திரிந்த 105 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமிற்குள்ளேயே முடங்கியுள்ள இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க திறந்தவெளி திரையரங்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இது போன்ற திரையிடல்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு மன ஆறுதலை அளிக்கும் என தன்னார்வலர்‌கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com