\
ஆவின் பொருட்கள் விலை உயர்வு - எவ்வளவு ரூபாய் தெரியுமா?

ஆவின் பொருட்கள் விலை உயர்வு - எவ்வளவு ரூபாய் தெரியுமா?

ஆவின் பொருட்கள் விலை உயர்வு - எவ்வளவு ரூபாய் தெரியுமா?
Published on: 

தமிழ்நாட்டில் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் நெய் 20 ரூபாய் விலை உயர்ந்து 535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரை லிட்டர் நெய் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் 27 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், 3 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

200 கிராம் பாதாம் பவுடர் 20 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதே போல், ஐஸ் கிரீம், குல்ஃபி உள்ளிட்ட பால் உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்றே அமலுக்கு வந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com