ஆவின் பாலை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: தனியார் பால் முகவர்கள் வேண்டுகோள்

ஆவின் பாலை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: தனியார் பால் முகவர்கள் வேண்டுகோள்

ஆவின் பாலை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: தனியார் பால் முகவர்கள் வேண்டுகோள்
Published on

தனியார் பால் நிறுவனங்களோடு சேர்த்து ஆவின் பால் நிறுவனத்தின் பாலின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்தி அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மீது சுமத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் பால் நிறுவனங்களோடு சேர்த்து ஆவின் பால் நிறுவனத்தின் பாலின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்தி அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பால் நிறுவனங்களில் மட்டும்தான் மொத்த விநியோகஸ்தர்கள் உள்ளதாக அமைச்சர் குற்றம்சாட்டிய நிலையில், ஆவின் நிறுவனத்திலும் மொத்த விநியோகஸ்தர்கள் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சரின் பேச்சால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தையும், பீதியையும் போக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com