வேலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நேரத்தில் மாற்றம் - மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நேரத்தில் மாற்றம் - மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நேரத்தில் மாற்றம் - மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மருத்துவர் குழுவுடன் ஆலோசித்தபோது, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் யாரும் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய கடைகளான மளிகைக் கடைகள், காய்கறிக்கடைகள், கறிக்கடைகள், பால் விற்பனை நிலையங்கள் போன்றவை செயல்படுவதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் இதுவரை பால் விற்பனையானது தினமும் காலை 06.00 மணிமுதல் 8.00 மணி வரையும். மாலை 05.00 மணி முதல் 07.00 மணிவரையும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேலூர் ஆவின் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று நாளை முதல் தினமும் காலை 06.00 மணி முதல் 10.00 மணிவரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும். மாலை நேரங்களில் விற்பனை இருக்காது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com