\
நாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்

நாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்

நாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்
Published on

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு நாளை முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.

ஆவின் பால் நிர்வாகம் சார்பில் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லி லிட்டர் ஆவின் நைஸ் (நீலம்) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு ரூ.20 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.21.50 ஆக விற்கப்படும். 500 மிலி ஆவின் மேஜிக் (பச்சை) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு ரூ.22.50 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.23.50 ஆகவும் விற்பனை செய்யப்படும். 

500 மிலி ஆவின் க்ரீம் பால் (ஆரஞ்ச்) அட்டைதாரர்களுக்கு ரூ.24.50 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.25.50 ஆகவும் விற்கப்படும். ஆவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதன் எதிரொலியாக விரையில் தனியார் பால் விலைகளும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும், தயிர், மோர், நெய், வெண்ணெய் ஆகிய பொருட்களின் விலையும் உயரும் எனத் தெரிகிறது. நேற்றைய தினம் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com