\
ஆவின் தயிர் பக்கெட், ரசகுல்லா இன்று அறிமுகம்

ஆவின் தயிர் பக்கெட், ரசகுல்லா இன்று அறிமுகம்

ஆவின் தயிர் பக்கெட், ரசகுல்லா இன்று அறிமுகம்
Published on: 

ஆவின் நிறுவனம் சார்பில் ஒரு கிலோ தயிர் பக்கெட் (வாளி), ரசகுல்லா ஆகியவை இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவன அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று இவற்றை அறிமுகப்படுத்துகிறார். ஆவின் ஒரு கிலோ தயிர் பக்கெட் ரூ.100க்கும், ரசகுல்லா 100 கிராம் ரூ.40க்கும், 200 கிராம் ரூ.80க்கும் விற்கப்பட உள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஆவின் பால் விற்பனை இப்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 200 இடங்களில் புதிதாக ஆவின் பால் விற்பனை மையங்கள் நிறுவ உள்ளோம். ஆவின் பால் தரமானது என்று நிரூபணமாகியுள்ளது. ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com