நடிகர் ஆரி இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் நோக்கில், 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் சார்பாக, ’நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் - நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 2683 பேர், ஒரே நேரத்தில் இரண்டு நாற்றுகளை நட்டனர். இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த நாட்டுப்புறப் பாடகி, சின்ன பொண்ணு பாடல்களைப் பாடினார். மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர் .
இந்த நிகழ்ச்சி, 2017 பேரை கொண்டு சீனா நடத்திய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக, 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது. சாதனைக்காக இல்லாமல் விவசாயத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடந்தது.