\
கடலூர்
கடலூர்முகநூல்

கடலூர் | ஆடி அமாவாசை.. வீட்டில் வளர்த்த இறந்துபோன நாய்க்கு கண்ணீர் மல்க திதி!

கடலூரை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் வீட்டில் வளர்த்த ஜானு என்ற நாய்க்கு, கடற்கரையில் வைத்து கண்ணீர் மல்க திதி கொடுத்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஸ்ரீதர்

கடலூரை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் வீட்டில் வளர்த்த ஜானு என்ற நாய்க்கு, கடற்கரையில் வைத்து கண்ணீர் மல்க திதி கொடுத்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் வளர்த்த உயிரிழந்த நாய்க்கு திதி!

கடலுரை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் லேபர் வகையைச் சேர்ந்த ஜானு என்ற நாய் ஒன்றை, கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக பாசமாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென உடல் நல குறைவால் ஜானு நாய் உயிரிழந்ததுள்ளது. இதனால், உயிரிழந்த நாய்க்கு அவரது சொந்த நிலத்தில் இறுதி சடங்கு செய்து முடித்தனர்.

இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால், கடலூரில் அமைந்துள்ள வெள்ளி கடற்கரையில் சரவணன் மற்றும் அவரது சகோதரர் சுந்தரபாண்டியன், தீபக் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த ஜானுக்கு கண்ணிருடன் திதி கொடுத்தனர்.

கடலூர்
‘அதுவும் உயிர் தான சார்..’ - சாலை விபத்தில் உயிரிழந்த நாய்க்கு காவலர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

இன்றைய காலகட்டத்தில் மனிதனை மனிதனே மதிக்காத நிலை உருவாகி வருகிறது ...அப்படிப்பட்ட சூழலில் வீட்டில் வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com