கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண் கட்டாயமில்லை - இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண் கட்டாயமில்லை - இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண் கட்டாயமில்லை -  இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆதார் இல்லை என்பதற்காக எந்தவொரு அத்தியாவசிய சேவையையும் மறுக்க கூடாது. ஆதார் நெறிமுறைகளிலேயே விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை உள்ளது.வேறு காரணங்களுக்காக ஒருவர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின்படி அத்தியாவசிய சேவைகளை அவருக்கு மறுக்கக் கூடாது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் தேவை என்று காரணம் சொல்லி பொதுமக்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாகக் சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை மறுத்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com