திருப்பதியில் அனைத்து தரிசனத்திற்கும் ஆதார் விரைவில் கட்டாயமாக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரி வழியாக நடந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கும் வகையில் வரும் 10ஆம் தேதி முதல் டிக்கெட்டிலேயே தரிசன நேரத்தை குறிப்பிட்டு அளிக்கும் திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டிக்கெட் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

