\
ஆதார் தீர்ப்பு: கமல்ஹாசன் வரவேற்பு

ஆதார் தீர்ப்பு: கமல்ஹாசன் வரவேற்பு

ஆதார் தீர்ப்பு: கமல்ஹாசன் வரவேற்பு
Published on: 

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைதான் என்று ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பை, நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
 
அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அந்த அட்டைக்காக கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளின்போது தனிமனித தகவல் பாதுகாப்பு, அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இந்த வழக்கில் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைதான் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், ஆதார் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும். நன்றி தெரிவிப்பது இந்தியாவை உருவாக்கும் தருணங்களாகும்’ என்று கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com